ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் உள்ளிட்ட 21 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து விசேட விமானம் மூலம் நேற்று (26) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை, ரஷ்யத் தூதுவர் லெவான் ஜகர்யன் மற்றும் இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வரவேற்றனர்.
அலெக்சாண்டர் குட்சனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது, இலங்கை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சட்டத்துறை ஒத்துழைப்பையும் உறவுகளையும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
