HomeTop newsஇலங்கையின் பந்துவீச்சில் சரிந்தது பாகிஸ்தான்

இலங்கையின் பந்துவீச்சில் சரிந்தது பாகிஸ்தான்

லாகூரில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில், இலங்கை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இன்றைய (27) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து சரிந்தன.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். ஹசன் நவாஸ் 17 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெறத் தவறிய நிலையில், பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சஹான் அரச்சிகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், அசித பெர்னாண்டோ, எஷான் மாலிங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதன்படி, இப்போட்டியில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 111 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular