HomeTop newsஅநுரவின் வாழ்த்துக்கு லூலா கொடுத்த பதில்

அநுரவின் வாழ்த்துக்கு லூலா கொடுத்த பதில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லுாலா ட சில்வா (Lula da Silva) பதிலளித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இந்தியாவில் வைத்து அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கக் கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் எதிர்பார்ப்பதாகப் பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நான்காவது முறையும் பிரேசிலின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி லூலா ட சில்வாவின் தேர்தல் வெற்றிக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது X தளத்தில் பதிவொன்றையிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை பிரேசில் மக்கள் தங்களது வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாகவும், அதுவொரு மகத்தான வெற்றி என்றும் பிரேசில் ஜனாதிபதிக்கு, அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular