HomeTop newsநாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானம்

நாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானம்

சீரற்ற காலநிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular