ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிளைச் சங்கங்களில் 60 சதவீதமானவை நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் இணைப்பு அமைப்புகளில் 50 சதவீதமானவை நிறுவப்பட்டுள்ளதாகவும் டி.வி. சானக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இணைப்பு அமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியுள்ள 40 சதவீத கிளைச் சங்கங்களை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 4,000 பிரதேசக் கூட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் டி.வி. சானக மேலும் தெரிவித்துள்ளார்.
