Homeஉள்நாடுதெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆரச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கின் மட்டத்தை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி என்ற வேகத்தில் தெதுரு ஓயாவிற்கு நீர் திறந்து விடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கொண்டு, எதிர்வரும் நேரங்களில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular