Homeஉள்நாடுகனமழையால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

கனமழையால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக இன்று அதிகாலை வரை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு வான் கதவு (22) அதிகாலை தானாகவே மூடிக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் தானாகவே திறக்கக்கூடும் என்பதால், நீர்த்தேக்க அணைக்கு கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கோரியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular