HomeTop newsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதா? நிறுவனம் அதிரடி மறுப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதா? நிறுவனம் அதிரடி மறுப்பு

தங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான உடனேயே, அது தொடர்பான விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நிறுவனத்தின் உட்புற தகவல் தொழில்நுட்ப அமைப்பிலோ அல்லது செயல்பாட்டு அமைப்புகளிலோ சட்டவிரோதமாக நுழைந்தமை, தகவல்களுக்கு சேதம் ஏற்பட்டமை, தரவுகள் திருடப்பட்டமை அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளுக்கோ செயல்பாட்டுத் தொடர்ச்சிக்கும் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டமை தொடர்பில் எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்னஞ்சல் சேவைகள் உட்பட அனைத்து அமைப்புகளும் சேவைகளும் தடங்கலின்றி இயங்கியதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமான சேவைகளின் செயல்பாடுகளுக்கோ அல்லது சேவைகளின் தொடர்ச்சிக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

எந்தவொரு தரப்பிலிருந்தும் பிட்கொயின் (Bitcoin), அமெரிக்க டொலர்கள் அல்லது வேறு எந்த வடிவத்திலும் இலஞ்சம் மற்றும் கப்பம் கோரப்படவில்லை என்றும், அத்தகைய பணக் கொடுப்பனவு தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே, தமது அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவோ அல்லது அவை சைபர் குற்றவாளிகளின்  கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular