Homeவிளையாட்டுஐபிஎல் 2027-க்கு முன் மும்பை இந்தியன்ஸில் அதிரடி மாற்றமா?

ஐபிஎல் 2027-க்கு முன் மும்பை இந்தியன்ஸில் அதிரடி மாற்றமா?

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனே விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மஹேல ஜெயவர்தனேவுக்கும் இடையிலான பயணம் முடிவுக்கு வருவதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான அணியின் நிர்வாக அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜெயவர்தனே, பயிற்சியாளராகவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவரது விலகல் உறுதிப்படுத்தப்பட்டால், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular