HomeTop newsஅம்பத்தலை, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

அம்பத்தலை, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

அம்பத்தலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (17) காலை திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மின் தடையிற்கான பிரதான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular