Homeஉலகம்இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் கைது

இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.

பஞ்சாப் காவல்துறை, இம்ரான் கானின் சகோதரி அலீமா கானின் வீட்டில் சோதனை நடத்தியதுடன், அவரது மற்ற இரு சகோதரிகளான டாக்டர் உஸ்மா கான் மற்றும் நோரீன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்ததாக PTI செய்தித் தொடர்பாளர் சுல்ஃபி புகாரி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக PTI தகவல் செயலாளர் ஷேக் வகாஸ் அக்ரம், இம்ரான் கானின் சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவலில் எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று சகோதரிகளும் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்தின் பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின் கீழ், இம்ரான் கானின் மூன்று சகோதரிகளையும் 30 நாட்கள் காவலில் வைப்பதற்கான இரண்டு தனித்தனி உத்தரவுகளை லாகூர் துணை ஆணையர் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்ரான் கானின் PTI கட்சி எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்ட அழைப்பு சட்டவிரோதமானது என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular