HomeTop newsசீரற்ற வானிலை - நாடு முழுவதும் 38 பாடசாலைகள் இன்று மூடல்

சீரற்ற வானிலை – நாடு முழுவதும் 38 பாடசாலைகள் இன்று மூடல்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரத்தைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி மத்திய மாகாணத்தின் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் என மொத்தமாக 38 பாடசாலைகள் இன்று இயங்காது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular