HomeTop newsமக்களுக்குப் பிரம்மாண்ட வரப்பிரசாதம் - வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிகள் இரத்து

மக்களுக்குப் பிரம்மாண்ட வரப்பிரசாதம் – வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிகள் இரத்து

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸயில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகக் குறிப்பிட்டளவான வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

சில வரிகளால் சுமை ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

எனவே வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக சில வரிகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம். அடுத்த ஆண்டுக்காகத் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியனும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியனும் சேர்த்து மொத்தமாக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.

வீதிகள், பாலங்கள், மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு, இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகளவு மூலதனச் செலவினங்களைச் செய்யும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஊடாகவே, திறைசேரியிலுள்ள பணத்தைக் கிராமங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.

வறிய நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து ‘அஸ்வெசும’ திட்டத்தின் ஊடாகவும், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பாடசாலைப் புத்தகங்களை வாங்க முடியாதவர்களுக்குமான நிவாரணங்கள் ஊடாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில், அஸ்வெசும பயன்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கவுள்ளோம். அதற்கான நிதியையும் நாம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளோம்.

மக்கள் எப்போதும் நிவாரணங்களிலேயே தங்கியிருப்பது நல்லதல்ல. ஆனால், பொருளாதார வளர்ச்சி எவ்வளவுதான் அடைந்தாலும், நிவாரணங்களை நம்பி வாழும் ஒரு நலிவுற்ற சமூகப் பிரிவு எப்போதும் இருக்கும்.

வருமான வழியற்றவர்கள், உழைப்பதற்கான உடல் வலுவற்றவர்கள், எதிர்பாராத விதமாக அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு நாடு என்பது அப்படித்தான் இயங்க வேண்டும்.

குறிப்பாக, சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் இல்லங்களில் வாழும் பெற்றோரையும் பாதுகாப்பாளர்களையும் இழந்த சிறுவர்கள் உள்ளனர். அத்தகைய ஒவ்வொரு சிறுவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வங்கிச் சேமிப்புக் கணக்கொன்றில் மாதம் 5,000 ரூபாய் வீதம் வைப்பு செய்யப்படும்.

அவர்களுக்கு 18 வயதாகி வெளியேறினாலும், 21 வயது வரை அந்த 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும்.

அவர்கள் 21 வயதை எட்டி சமூகத்திற்குள் நுழையும்போது, ஒரு வீட்டைக் கட்டித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள 10 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular