HomeTop newsவைத்தியர்களுக்கு இடைநிலைத் தரநிலை - ஆராய்ந்து பரிந்துரைக்க 6 பேர் கொண்ட குழு நியமனம்

வைத்தியர்களுக்கு இடைநிலைத் தரநிலை – ஆராய்ந்து பரிந்துரைக்க 6 பேர் கொண்ட குழு நியமனம்

வைத்திய அதிகாரிகளுக்காக இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது குறித்த யோசனையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் செயலாளராக வைத்தியர் அமில சுரங்க நியமிக்கடைந்துள்ளதுடன், வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க, வைத்தியர் சமிந்த சமரகோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்த நிபுணர் குழுவின் மூலம் இடைநிலைத் தர நிலையை வரையறை செய்தல், அதில் உள்ளடங்கும் மருத்துவ நிபுணத்துவத் துறைகளை அடையாளம் காணுதல், வைத்திய அதிகாரிகளை உரிய துறைக்குத் தெரிவு செய்யும் நடைமுறை, அவர்கள் அங்கு சேவை ஆற்ற வேண்டிய கால எல்லை, அவர்களுக்கு உரித்தாகும் நன்மைகள் மற்றும் இடமாற்றச் செயற்திட்டம் குறித்து விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

உரிய தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்குக் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular