HomeTop newsடொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 5.5 சதவீதம் வீழ்ச்சி

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 5.5 சதவீதம் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பயணவழிகாட்டிகளை வாசித்தல்

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.

கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயணவழிகாட்டிகளை வாசித்தல்

நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular