HomeTop newsநேபாளத்தில் தொடரும் பேரழிவு - நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் 100 பேர் சிக்கித் தவிப்பு

நேபாளத்தில் தொடரும் பேரழிவு – நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் 100 பேர் சிக்கித் தவிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular