உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் ‘தாய்ப்பால் வாரம்’ பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
