HomeTop newsபுனித ஸஃபர் மாதம் இன்று மாலை முதல் ஆரம்பம்

புனித ஸஃபர் மாதம் இன்று மாலை முதல் ஆரம்பம்

புனித ஸஃபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று புதன்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் எந்தப் பாகத்திலும் தலைப் பிறை தென்பட்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இதன் காரணத்தால் புனித முஹர்ரம் மாதத்தை இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை 30 ஆக பூர்த்தி செய்து மாலை மஹ்ரிபு ‌ தொழுகையுடன் புனித ஸஃபர் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழுத் தலைவர் அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular