HomeTop newsநள்ளிரவு முதல் உணவக உணவுகளின் விலையும் குறைவு

நள்ளிரவு முதல் உணவக உணவுகளின் விலையும் குறைவு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடளாவிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவிக்கையில், ஒரு பொதி சோற்றின் விலை 15 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை தலா 15 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்றார்.

அத்துடன், சிற்றுண்டி வகைகள், பராட்டா, முட்டை ரொட்டி, பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் ஆகியவற்றின் விலைகள் தலா 5 ரூபாவால் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய விலைக் குறைப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular