HomeTop newsவக்வெல்ல பாலம் அருகே கிங் கங்கையில் ஆண் சடலம் மீட்பு

வக்வெல்ல பாலம் அருகே கிங் கங்கையில் ஆண் சடலம் மீட்பு

போத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போத்தல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நேற்று (23) மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular