HomeTop newsபாதுக்கை உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இன்று 24 மணி நேர நீர்வெட்டு

பாதுக்கை உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு இன்று 24 மணி நேர நீர்வெட்டு

பாதுக்க, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்த உள்ளிட்ட பகுதிகளில் இன்று (24) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், நீர்விநியோகம் மீள வழமையான நிலைக்கு திரும்புவதில் சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular