தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலனும் அவரது மனைவியும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த தம்பதியினர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
