Homeஉள்நாடுநாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்று (14) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular