HomeTop newsதலவத்துகொட உணவகத் தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழப்பு

தலவத்துகொட உணவகத் தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழப்பு

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மூவரும் உயிரிழந்துள்ளனர்

இன்று (09) முற்பகல் குறித்த உணவகத்தில் தீ பரவியிருந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular