தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது.
கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக், டேவிட் வில்சன் ஆகியோர் 5 நாள் பயணமாக தைவானுக்கு சென்றனர்.
தொடர்ந்து அந்த நாட்டின் துணை அதிபர் சியாவ் பி-கிம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தனர்.
இந்த எம்.பி.க்கள் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்ப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியது.
