Homeசினிமாபாக்ஸ் ஆபீஸில் ராம் சரணின் ருத்ரதாண்டவம்

பாக்ஸ் ஆபீஸில் ராம் சரணின் ருத்ரதாண்டவம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் நேற்றுமுன்தினம் உலகளவில் வெளியான படம் ‘பெத்தி’.

இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

விளையாட்டை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.181.8 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

முதல் நாளிலேயே மாபெரும் வரவேற்பையும், கணிசமான வசூலையும் பெற்றுள்ளதால், வரும் நாட்களிலும் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.

ராம் சரண் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம், தற்போது வசூல் வேட்டையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular