Homeஉலகம்இராணுவ சீருடையில் டொனால்ட் டிரம்ப்

இராணுவ சீருடையில் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது உருவப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது வைரலாகி வருகிறது.

ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்ட தனது உருவப்படத்தை டிரம்ப் வெளியிட்டார்.

போர்க்களத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தும் உக்ரைன் ராணுவம்
அதில் அவர் ராணுவ சீருடையை அணிந்துகொண்டு தனது கையை நீட்டியபடி போருக்கு தயார் ஆவது போன்றும், தன்னைச் சுற்றி போர் விமானங்கள் சீறிப் பாய்வதும் போன்றும் சித்திரிக்கப்பட்டிருந்தார்.

மேலும் அந்த படைப்பில், “நீங்கள் நிலைகுலைவீர்கள்” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் போர் துறையைச் சேர்ந்த பீட் ஹெக்ஸெத், “தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா முழுத்திறனையும் கொண்டுள்ளது” என்று கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்நாமுக்கு விற்கும் ஒப்பந்தம் கையெழுத்து
இந்த அறிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள CENTCOM,“அமெரிக்க ராணுவ படைகள் பிராந்தியம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டு விழிப்புடன் உள்ளன” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular