Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை வீழ்த்தி பிரான்ஸின் பிஎஸ்ஜி (Paris Saint-Germain) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரு அணிகளின் ரசிகர்களிடையே வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹங்கேரியில் நடைபெற்ற இறுதிப் போட்டி 1–1 என்ற சமநிலையுடன் முடிவடைந்து, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி 4–3 என வெற்றி பெற்றது. இதன் மூலம் பிஎஸ்ஜி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்ததாகவும், இதனை கட்டுப்படுத்த காவல்துறை பெருமளவில் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் 7 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

வன்முறையில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், 6 வாகனங்கள், 2 பேருந்துகள் மற்றும் சில வணிக கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாரிஸில் மட்டும் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சீசனின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் வன்முறை சம்பவங்களில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular