HomeTop newsஇலங்கை மத்திய வங்கியின் அதிரடி அதிரடி நகர்வு - கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படை...

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அதிரடி நகர்வு – கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படை புள்ளிகளால் உயர்வு

இலங்கை மத்திய வங்கி ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தி 8.75% ஆக நிர்ணயிக்க தீர்மானித்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார சவால்கள் ஆகியவற்றை விரிவாக பரிசீலித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆக நிலைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular