அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளராக பணியாற்றி வந்த துள்சி கபார்ட் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
தனது கணவர் ஆபிரகாம் கடுமையான உடல்நல பிரச்சினையை எதிர்கொண்டு வருவதால், குடும்பத்துடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்புக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தில்,
“கடந்த 11 ஆண்டுகளாக ஆபிரகாம் என் வாழ்க்கையின் உறுதியான ஆதாரமாக இருந்து வருகிறார். என் அரசியல் பயணத்திலும், தற்போதைய பொறுப்புகளிலும் அவரது ஆதரவு அளப்பரியது”
“அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருடன் இந்த கடினமான காலத்தில் நான் அருகில் இருக்க வேண்டியுள்ளது. அதனால், ஜூன் 30 முதல் அமலுக்கு வரும் வகையில் என் இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்” என்று துள்சி குறிப்பிட்டுள்ளார்.
துள்சி கபார்டின் இந்த திடீர் முடிவு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
