HomeTop newsயூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும், விவசாயிகள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொய்யான மாயையை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு உரம் இருப்பதாகவும், பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளதாகவும் துஷார விக்ரமாராச்சி மேலும் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular