Homeஉலகம்அமெரிக்கா மறைத்து வைத்த விண்வெளி மர்மங்கள் அம்பலம்

அமெரிக்கா மறைத்து வைத்த விண்வெளி மர்மங்கள் அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான இரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இந்த இரகசியத் தகவல்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

வெளியான கோப்புகளில் 1940-களிலிருந்து சேகரிக்கப்பட்ட UFO தொடர்பான அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 1947 ஆம் ஆண்டு பதிவான பறக்கும் தட்டுகள் குறித்த அறிக்கைகள், 1969 ஆம் ஆண்டு அப்போலோ 12 விண்கலம் நிலவில் எடுத்த மர்ம புகைப்படம், 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 வீரர்கள் கண்டதாக கூறப்படும் அடையாளம் தெரியாத பொருட்கள் தொடர்பான உரையாடல்கள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன.

இருப்பினும், வெளியான சுமார் 160 கோப்புகளை ஆய்வு செய்த நிபுணர்கள், வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

UFO ஆய்வாளர் மிக் வெஸ்ட் கூறுகையில், வீடியோக்களில் காணப்படும் உருவங்கள் பெரும்பாலும் கேமரா லென்ஸ் கோளாறுகள் அல்லது தொலைதூர ஒளி பிரதிபலிப்புகள் ஆக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்த வெளியீடு, அரசியல் சர்ச்சைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம் என சில தரப்பினர் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

மேலும், நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் விண்கற்கள் தாக்கத்தால் ஏற்பட்ட தடங்களாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக மேலும் தகவல்கள் வெளியாக உள்ளதால், விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular