இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகள் 25 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனுடன், லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள சுமார் 25% முதல் 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாக கூறினார். தற்போதைய எரிவாயு விலை உயர்வால் அந்தச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
