Homeசெய்திபஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிநடை தொடருமா?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிநடை தொடருமா?

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று மிரளச் செய்திருந்தது பஞ்சாப் அணி.

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular