Homeஉலகம்ஈரானியர்களின் தற்துணிவை பாராட்டிய புடின்!

ஈரானியர்களின் தற்துணிவை பாராட்டிய புடின்!

நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது கடற்படை முற்றுகை மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது.

அமைதி பேச்சில் பங்கேற்பதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஈரானும் தமது திட்டத்தில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையிலான ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் பிராந்திய அமைதியை நிலைநாட்ட தூதரகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ரஷ்யாவின் ஆதரவு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular