HomeBig Storyஈரான் போருக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்!

ஈரான் போருக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்!

ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தகவல்களின்படி இது போர்ச் சூழலோடு இணைக்கப்படவில்லை என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் ஈரான் விவகாரத்தில் தனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயல்படப்போவதாகவும் ட்ரம்ப் உறுதிபட கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular