Homeசெய்திமலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது.” என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின் தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் ( CCT) ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு ஹட்டனில் இன்று (24) நடைபெற்றது.

இதன்போதே CCTஇன் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் தம்பையா ரஜனிகாந்த் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

டிட்வா அனர்த்தத்தின் பின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் மற்றும் வளப்பகிர்வில் உள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

திறந்த பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் பேராசிரியர் சந்திரபோஸ், மனித உரிமைகள் நிலையத்தின் அட்டன் பிராந்திய முகாமையாளரும் சமூக சிற்பி நிறுவனத்தின் தலைவருமான ஜெயராஜ், SWM நிறுவனத்தின் தலைவர் சந்திரமதி, சுய சக்தி நிறுவன இணைப்பாளர் செல்வராஜ் , அரசியல் செயல்பாட்டாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் உள்ளிட்டவர்கள் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

தகவல்
லோ.சுரேஸ்கண்ணா
கொட்டகலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular