Homeஉள்நாடுமாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!

மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!

🙏”மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” ஊடாக சித்திரைப் புத்தாண்டின் முதலாவது நிகழ்வாக மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளுக்கு நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்படி மன்றத்தின் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் பரீட்சைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான வீ. ஏகாம்பரம் தலைமயில் முற்பகல் 10 மணிக்கு மாத்தளை திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்துக்கு இலவசப் பாடநூல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான புத்தக அடுக்குகளுடன் கூடிய களஞ்சிய அறையும், முற்பகல் 11.30 மணிக்கு மாத்தளை ரத்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களும் கையளிக்கப்படவுள்ளன.

அத்தோடு இரண்டு வித்தியாலயங்களுக்கும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் உரிய கடந்த கால பரீட்சை வினா விடை புத்தகங்களும் வழங்கப்பட்டவுள்ளன. மேலும் இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 500 மாணவர்களுக்கும் மன்றத்தின் சார்பில் கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular