Homeஉள்நாடுபோடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

டிக்கோயா , போடைஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது. இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக போடைஸ் வீதி வெள்ளத்தில் சுமார் ஆறு ஏழு அடி மூழ்கியதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

இதனால் போடைஸ்,மண்ராசி, ஊடாக அக்கரபத்தனை,டயகம செல்லும் போது மக்கள் பல மணித்தியாலங்கள் வெள்ளம் வழிதோடும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதி மழை பெய்யும் போதெல்லாம் வெள்ள நீரால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைவதாகவும் இது குறித்து பலருக்கு அறிவித்த போதிலும் இது முறையான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் எனவே இதற்கு நிரந்தர தீர்வாக ஆற்றினை அகலப்படுத்துமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலைவாஞ்சான்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular