Homeஉள்நாடுநுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் பாதுகாப்புப் பிரிவினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது நீர்நிலைகளில் நீராடுவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சாரதிகளுக்கு எச்சரிக்கை:

நுவரெலியா வீதிகள் அதிக வளைவுகளைக் கொண்டிருப்பதனாலும், மாலை வேளைகளில் பெய்யும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாகவும் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

‘டித்வா’ புயல் காரணமாக புகையிரதப் பாதைகள் சேதமடைந்து புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வழமைக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தனிப்பட்ட வாகனங்களில் வருகை தந்துள்ளனர். இது எரிபொருள் சிக்கனத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மலைவாஞ்சான்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular