Homeசெய்திஇன்றாவது வெல்லுமா சி.எஸ்.கே?

இன்றாவது வெல்லுமா சி.எஸ்.கே?

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்​வியடைந்​துள்​ளது.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி தனது இரு ஆட்​டங்​களில் லக்​னோ, மும்பை அணிகளை தலா 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வென்றிருந்​தது.

இந்த இரு ஆட்​டங்​களி​லும் சமீர் ரிஸ்வி அதிரடி​யாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தார்.

கடைசி​யாக டெல்லி அணி, குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிடம் ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் அதிர்ச்சி தோல்வி அடைந்​திருந்​தது. இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுதவற்கான முயற்​சியை டெல்லி அணி எடுக்​கக்​கூடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular