Homeஉலகம்இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் லெபனான் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என பாகிஸ்தான் தரப்பு வாதிட்டாலும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஈரான்மீதான தாக்குதலை நிறுத்தினாலும் லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்திவருகின்றது.

இதனை நிறுத்துமாறும், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குள் லெபனானையும் உள்ளடக்குமாறு பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular