Homeஉள்நாடுஇன்வெரி தமிழ் பாடசாலை அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி பதவியேற்பு!

இன்வெரி தமிழ் பாடசாலை அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி பதவியேற்பு!

ஹட்டன், டிக்கோயா இன்வெரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று பதவியேற்றார்.

இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர்.

ஹட்டன் ஒன்சி கல்லூரியின் பழைய மாணவரான இவர்
பொன்னகோட் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப ஆசிரியராகவும், ஹட்டன் சிவானந்தா கல்லூரியில் உயர்தர புவியியல் பாட ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியான தேவதாசன் கிங்ஸ்லி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா (PGDE) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular