Homeஉலகம்ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: மனித உரிமைகள் பேரவையில் நாளை விவாதம்!

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: மனித உரிமைகள் பேரவையில் நாளை விவாதம்!

ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது.

மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்குமாறு ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகிறது.

போர் காலங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்துவதே இந்த விவாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular