Homeஉலகம்ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்!

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் நீண்டகால பேச்சுக்கு பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தேச ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வயின் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிச் சுமைகளைக் குறைக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்குப் பதிலீடாக ஐரோப்பியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை வழங்கவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.

வர்த்தகத்தைத் தாண்டி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் இரு தரப்பினரும் தங்கள் உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கன்பராவில் இன்று ஆஸ்திரேலிய பிரதமருடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular