Homeஉள்நாடுவாழ்வா, சாவா? இந்திய அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

வாழ்வா, சாவா? இந்திய அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (26) மோதுகின்றன.

போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் South Africa அணியிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியா இன்றைய போட்டியில் அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மறுபுறம், சிம்பாப்வே அணி லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான Australia மற்றும் Sri Lanka அணிகளை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

ஆனால், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் West Indies அணியிடம் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால், இன்றைய போட்டியில் சிம்பாப்வேக்கும் வெற்றி அவசியமாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் “வெற்றி கட்டாயம்” என்ற நிலை இருப்பதால், ரசிகர்களுக்கு பரபரப்பான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular