Homeஉள்நாடுபங்களாதேஷ் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா பயணம்!

பங்களாதேஷ் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா பயணம்!

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாளை, (17) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா செல்லவுள்ளார்.

பங்களாதேஷில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா மற்றும் காலிதா ஷியா ஆகிய இரு பெண் தலைவர்களே மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்கும் முக்கிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.

இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பாக மக்களவைத் தலைவர் (Lok Sabha Speaker) ஓம் பிர்லா கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular