Homeஉள்நாடுதோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!

தோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

“சம்பள உயர்வு வழங்கிய” பிரசிடெண்ட் AKD, மலை மேல ஏறி, உழைக்கும் பெண்ணின் கரங்கள பிடிச்சு நம்பிக்கை தருகிறார். நல்ல விஷயம்!!!

மேலதிக ஒரு கிலோவுக்கு ரூவா 50/= என்பது ஏற்கனவே இருக்கிற சிஸ்டம்தான். ஆகவே இதையும் மீறி சம்பள உயர்வு கிடைச்சா அத மனம் விட்டு பாராட்டனும். ஆகவே பொறுமையுடன் வரவேற்போம்.

இதை விட, தொழிலாளியை, பங்காளியா மாற்றும், தொழில் துறை மாற்றம், “சிஸ்டம் செஞ்ச்” கொண்டு வரனும் என்பது தான் எங்க #TPA கொள்கை!

மற்றபடி, இங்கே நான் சொல்ல வாற விஷயம்,“காணி உரிமை” என்பதாகும். “சம்பளம்” என்பதை விட “காணி உரிமை” பிரதான விஷயம் என்று நான் சொல்லி திரிகிறேன்.

அதை ஏன் தர மறுக்கிறீங்க மிஸ்டர் பிரசிடெண்ட்? என்று கேட்டால் செக்ரட்டரியட்டில் இருந்து பதில் இல்லை. ஆகவே அதை நான் சர்வதேச சமூகத்திடம் மீண்டும், மீண்டும் கூறுகிறேன்.

“மிஸ்டர் ManoG, அது பற்றி எல்லாம் நீங்க கவலை படாதீங்க. அத நாம பார்த்து கொள்கிறம். நீங்க சும்மா இருந்தாலே போதும். நம்ம ஜனாதிபதி AKD, நிச்சயமா காணி தருவார்” எ‌ன்று இதற்கு, AKD ஆதரவாளர்கள் பதில் கூறுறாங்க.

இத கேட்டு நான் கோபம், கவலை எதுவுமே அடையல. ஏனெனில், “இது நல்ல ஒரு பதில்.”! இந்த பதில் எனக்கு மறக்காது. எனக்கு பதில் சொல்பவர்கள், அடுத்த வருஷம் வரையாவது, ஞாபகம் வைச்சு கொள்வது நல்லது!
(பின் குறிப்பு)

பொறுப்பில் உள்ள மலையக அமைச்சர்கள் எவருமே, இப்படி நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லல. AKDயின் பாமர ஆதரவாளர்கள் தான் இப்படி ஆர்வ மிகுதியில், சொல்றாங்க.

இன்னும் சிலர், ஆர்வ கோளாறு அதிகமாகி, “நீங்க ஆட்சியில் இருந்த போது ஒரு மண்ணும் பண்ணலையே” என்று சமூக ஊடகங்களில் கூலிக்கு கூவுறார்கள். நாம் நான்கு (4) வருஷமே ஆட்சியில் இருந்தோம். இதுவே பலருக்கு தெரியாது.

இவர்கள் வரலாற்றில் தேடி பார்க்க வேண்டும். அந்த நாலே வருஷத்தில, மலை நாட்டில், “7-பேர்ச் காணி, தனி வீடு, 10,000-இந்திய உதவி வீடமைப்பு திட்டம்” ஆகியவற்றை அமைச்சரவை தீர்மானமாக, பாராளுமன்ற சட்டமாக, அரசாங்க கொள்கையாக, புரிந்துணர்வு ஒப்பந்தமாக, கொண்டு வந்ததே, நாம்தான்!
மனோ_கணேசன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular