Homeஉலகம்பிரிட்டனில் யூத தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: இருவர் பலி!

பிரிட்டனில் யூத தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: இருவர் பலி!

 

பிரிட்டன் யூத தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.

மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது.

வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி,

‘திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்ஷ” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular