Homeஉள்நாடுஐ.நா. கூட்டத்தொடரில் புதனன்று ஜனாதிபதி உரை!

ஐ.நா. கூட்டத்தொடரில் புதனன்று ஜனாதிபதி உரை!

 

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் நாளை நிவ்யோர்க் நோக்கி பயணமாகின்றனர்.

அரச தலைவராக தனது முதல் ஐ.நா. பொதுச் சபை உரையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular